பற்றிகோட்டா செமினரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றினால் வழங்கப்பட்ட கல்விப் பணிகளின் 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த குருதிக்கொடை நிகழ்வில் 200 பேர் குருதிக்கொடை செய்வதற்கான ஏற்பாடுகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் குருதி வங்கியிடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
அதன் முதலாவது கட்டமாக நாளை திங்கட்கிழமை (ஜூன் 19) காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணிவரை ஒட்லி மண்டபத்தில் குருதிக்கொடை நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் இந்த “உயிர் காக்கும்” உன்னத சேவையில் கலந்து பங்களிப்பு வழங்குமாறு அன்பாக அழைக்கின்றோம் என்று ஏற்பாட்டுக்குழு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.