யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் குற்றச்செயல்களும் பொலிஸ் அதிகாரியின் தகிடு தத்தமும்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினும் விடுப்புகள் வரும் 18ஆம் திகதிவரை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த கட்டளை வழங்கிய அவர், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலிருந்து 100 பொலிஸ் உத்தியோகத்தர்கயை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்திருந்தார்.

- Advertisement -

இந்தத் தகவலை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோவின் சார்புப் பத்திரிகை ஒன்று நேற்று வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சில ஊடகங்களும் முந்திக்கொண்டு இந்தச் செய்தியை வெளியிட்டன.

எனினும் யாழ்ப்பாணப் பத்திரிகை உள்பட ஏனைய ஊடகங்கள் இந்த விடயத்தை ஆராய்ந்து செய்தி வெளியிட்டதாகவில்லை.

60 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்டும் நேற்று வியாழக்கிழமை வரை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து சிறப்புக் கடமையைப் பொறுப்பேற்றுள்ளனர். வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரால் யாழ்ப்பாணத்துக்கு வரவழைக்கப்பட்ட அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்தவர்கள்.

அத்துடன், அவர்களில் பலர் தண்டனை இடமாற்றம் பெற்று வடக்கு மாகாணத்துக்கு வந்தவர்கள் என்று அறியமுடிகின்றது.

தமிழ் பொலிஸாருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிய திறமையான – நல்லொழுக்கமுள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர், வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இரண்டு தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையாற்றினர். அவர்களில் ஒருவரை கடந்த 19ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

தற்போது வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள பகுதிகளில் மானிபாய் பொலிஸ் பிரிவும் அடங்குகின்றது. 2 வாள்வெட்டுச் சம்பவம்கள் , வயோதிப் பெண் கொலை என மூன்று குற்றச்செயல்கள் அங்கு கடந்த வாரம் ஒரே நாளில் இடம்பெற்றது. அவை மூன்றையும் விசாரிக்கும் பணியில் ஒரே ஒரு தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரே அமர்த்தப்பட்டுள்ளார்.

அத்துடன், அவரே முறைப்பாடுகளை பதிவு செய்யவேண்டும், நீதிமன்றப் பிடியாணைகளை நிறைவேற்றவே, நீதிமன்ற அழைப்பாணைகளை உரியவர்களிடம் சேர்ப்பிக்கவேண்டும். இத்தனை கடமைகளுக்கும் ஒரு தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரை ஈடுபடுத்துவது பொருத்தமானதாகுமா?
அதனால்தான் மானிப்பாய் வயோதிப் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனநோய் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார். அந்த சந்தேகநபர் இந்தக் கொலையை செய்யவில்லை என கண்கண்ட சாட்சி தெரிவித்த போதும், மனநோயாளியை மன்றில் முற்படுத்திய பொலிஸார், அவரை விளக்கமறியலில் வைக்க விண்ணப்பம் செய்திருந்தனர்.

அத்துடன், மானிப்பாய் லோட்டன் வீதியிலுள்ள இரண்டு வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பில், இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் சாட்சிகள் குறிப்பிடவில்லை. சாட்சிகள் குறிப்பிட்ட 9 சந்தேகநபர்களில் ஒருவரைக் கூட பொலிஸார் கைது செய்யவில்லை.

மேலும் சாட்சிகள் குறிப்பிட்ட 9 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் யாழ்ப்பாணம், மல்லாகம் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் பிணையில் வெளிவந்தவர்.
சந்தேகநபர்களை அடையாளம் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை எந்தவித காரணமுமின்றி இடமாற்றிவிட்டு, புதியவர்களை அழைத்துவந்து ஊடகங்களுக்கு அறிக்கையிடுவதால் குற்றச்செயல்களை கட்டுப்படுத்திவிட முடியாது.

பொலிஸாருக்கு வாகன வசதியில்லை

யாழ்ப்பாணம், மானிப்பாய் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களின் குற்றப்பிரிவு பொலிஸாருக்கு வாகன வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்ய வேண்டுமானால் பொலிஸ் உத்தியோகத்தர் தனது சொந்த மோட்டார் சைக்கிளிலிலேயே செல்லவேண்டும் என்று கூறுகின்றனர்.

நீதிமன்றங்களில் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யாது, சந்தேகத்தின் அடிப்படையில் வேறு நபர்களைக் கைது செய்து வழக்குகளை முடிவுறுத்துவதே பொலிஸாரின் செயற்பாடாக உள்ளது என சட்டத்தரணிகளால் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

“தென்னிலங்கையில் கடமையாற்றி தண்டனை இடமாற்றம் பெற்றுவரும் பொலிஸார், சந்தேகநபர்களைத் தேடிப் பிடிப்பதைவிடுத்து, பழைய வழக்குகளில் அல்லது ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் பொலிஸ் விசாரணைக்கு உள்படுத்தோரைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துகின்றனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட முடியாதவை. அதனால் குற்றச்செயல் தொடர்பான வழக்குகள் பல தள்ளுபடியாகின்றன” என்று சட்டத்தரணிகளால் தெரிவிக்கப்படுகின்றன.
எனவே, கடமையிலுள்ள பொலிஸாரைக் காரணமின்றி இடமாற்றுவதும் தனக்கு கட்டுப்படாது குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முற்படும் பொலிஸாரை இடமாற்றுவதையும் வழக்கமாகக் கொண்ட வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, தற்போது குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை காண்பிப்பவராக ஊடகங்களில் அறிக்கையிடுகிறார்.

என்ன செய்வது அவருக்கான ஆதரவை வழங்கும் யாழ்ப்பாண பத்திரிகையையும் தொலைக்காட்சி சேவை மற்றும் சில ஊடகங்களும் உள்ளவரை அவரும் இவ்வாறுதான் செயற்படுவார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!