Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்யாழ்ப்பாணத்தில் ஒரு நிறுவனம் உள்பட 15 நாணயமாற்று நிறுவனங்களின் அனுமதி ரத்து

யாழ்ப்பாணத்தில் ஒரு நிறுவனம் உள்பட 15 நாணயமாற்று நிறுவனங்களின் அனுமதி ரத்து

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களின் நிபந்தனைகளுடன் இணங்கியொழுகாமையின் காரணமாக, யாழ்ப்பாணத்தில் ஒரு நாணயமாற்று நிறுவனம் உள்பட 15 நாணய மாற்றுநர்களின் நாணயப் பரிமாற்றல் அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்துள்ளது.

அவர்களின் அனுதியை 2023ஆம் ஆண்டுக்கு புதுப்பிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதுடன், இவ்வறிவித்தலானது உரிய நாணய மாற்றுநர்களுக்கு 2023.02.22ஆம் திகதி அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இயங்கும் ஷாரங்கா மணி எக்ஸ்சேன்ஜ் (பிறைவட்) லிமிடெட் (Sharanga Money Exchange (Pvt) Ltd) நிறுவனத்தின் அனுமதியும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, 15 கம்பனிகள் நாணயப் பரிமாற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இனிமேலும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அத்தகைய கம்பனிகளுடன் வெளிநாட்டு நாணயத்தை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் பரிமாற்றம் செய்தல் என்பன 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளை மீறியதாகக் கொள்ளப்படும் என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular