யாழ்ப்பாணத்தில் கோரோனா தொற்று பாதித்த 36 பேர் இன்று அடையாளம்; 22 பேர் யாழ்.மாநகரில்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை (மே 10) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் எழுமாறாக சிலரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் நால்வருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

- Advertisement -

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 778 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லலைத்தீவு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 4 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 2 பேர் கோரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் பண்டத்தரிப்பு ஆயுர்வேத வைத்தியசாலை பணியாளர்கள்.

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் நெல்லியடி கடைத் தொகுதியில் எழுமாறாக பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகளில் வெதுப்பக பணியாளர். மற்றையவர் அண்மையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பியவர்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 22 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 18 பேர் ஏற்கனவே தொற்றாளர்களுடன் முதல்நிலை தொடர்பாளர்களாக இருந்து சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

ஏனைய நால்வரும் எழுமாறாக சிலரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!