யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்றும் உயர்வு

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 500 ரூபாயால் உயர்வடைந்துள்ளது.

அமெரிக்க டொலரின் மதிப்பு நன்றாக இருப்பது, தங்க விலை குறைவடையவேண்டும். ஆனாலும், கோரோனா வைரஸ் பரவல் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தம் போன்றவை, தங்கத்தின் மீது முதலீடு செய்வதை பாதுகாப்பாக உணரச் செய்கிறது. எனவே தங்கத்தின் விலை அதிகரித்துச் செல்லும் என்று பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்தில் இறங்கு முகத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்போது ஏற்றத்தில் உள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை
யாழ்ப்பாணத்தில் இன்று (ஒக். 3) 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுண் ஒன்று 93 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரித்துள்ளது.

தூய தங்கத்தின் விலை
ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.