யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை உயர்வு

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு  ஆயிரம் 500 ரூபாயால் உயர்வடைந்துள்ளது.

இந்த வாரம் தளம்பல் நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று ஆயிரத்து 500 ரூபாயால் அதிகரித்துள்ளது.

கோரோனா வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. அத்தோடு உலகப் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை

யாழ்ப்பாணத்தில் இன்று (ஒக்.9) ஒரு பவுண் (22 கரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 94 ஆயிரத்து 400 ரூபாயாக அதிகரித்துள்ளது.

தூய தங்கத்தின் விலை

8 கிராம் தூய தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.