யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

0

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலையில் தளம்பல் நிலை காணப்படுகிறது.

கடந்த வாரம் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாள்கள் சற்றுச் சரிவைச் சந்த்தித்தது. எனினும் இன்று தங்கத்தின் விலை 300 ரூபாயால் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துச் செல்கிறது. அத்துடன், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திச் செல்ப்படுகிறது. அதனால் தங்கத்தின் விலை இன்னும் உயர்வைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இன்று (ஒக்டோபர் 16 ) வெள்ளிக்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை  95 ஆயிரத்து 150 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 94 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்று ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 800 ரூபாயாக அதிகரித்துள்ளது.