யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்றும் உயர்வு

யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஆயிரம் ரூபாயினால்
அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று நாள்களின் 3 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட கோரோனா வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.

அத்தோடு இலங்கையில் டொலருக்கான தட்டுப்பாடு உள்ளதனால் தங்க இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதால் அதன் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை

யாழ்ப்பாணத்தில் இன்று (டிசெ. 29) ஒரு பவுண் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 950 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று அதன் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாகக் காணப்பட்டது.

தூய தங்கத்தின் விலை

24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.