Wednesday, September 27, 2023
Homeஉள்ளூர் செய்திகள்யாழ்ப்பாணம் உற்பத்தி பொருட்களுக்கான வாரந்த சந்தை; பிரதி ஞாயிறு தோறும் சங்கிலியன் பூங்காவில்

யாழ்ப்பாணம் உற்பத்தி பொருட்களுக்கான வாரந்த சந்தை; பிரதி ஞாயிறு தோறும் சங்கிலியன் பூங்காவில்

“யாழ்ப்பாணம் மாவட்ட
முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுட்களுக்கான சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் முகமாக மாவட்ட செயலகத்தினால் 02.04.2023 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் வாராந்த சந்தை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாணம் மாவட்ட உற்பத்திப் பொருட்களுக்கான வாரந்த சந்தை” என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயத்துறை, கைத்தொழில் துறை சார் உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்யமுடியும் என்று மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் அறிவித்துள்ளார்.

“இதனூடாக உற்பத்தியாளர்களின் இடைத்தரகர்களுக்கான செலவீனம் குறைக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் நுகர்வோர்களின் தேவைக்கேற்றவாறு உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு அவர்கள் தமது பொருளாதாரத்தில் முன்னேற்றமடைவதுடன் ஏனையவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தை பின்பற்றி பயன்பெற விரும்பும் முயற்சியாளர்கள் தமது பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும். அத்துடன் அலுவலக நேரத்தில் 0212213861, 0778842577 என்ற தொலைபேசி இலக்கஙகளுடன் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும்” என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular