கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு நல்லை ஆதீன முதல்வரால் தைப்பொங்கல் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் இன்று (ஜன.13) மாலை செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் ஆகியோர் சகிதம் கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்குச் சென்று அங்கு தைப்பொங்கல் விழா செய்வதற்கான பொங்கல் பொருள்களை மருத்துவர்களிடம் கையளித்தனர்.
அங்கு சிகிச்சை பெறும் நோயாளர்கள் மற்றும் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்களுக்கு சுவாமிகள் தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து தமது நல்லாசிகளையும் வழங்கினார்.