Wednesday, December 6, 2023
Homeஉள்ளூர் செய்திகள்யாழ்ப்பாணம் நகரிலுள்ள பாழடைந்த வீட்டில் ஒன்றுகூடி ஹெரோயின் நுகர்ந்த 10 பேர் கைது

யாழ்ப்பாணம் நகரிலுள்ள பாழடைந்த வீட்டில் ஒன்றுகூடி ஹெரோயின் நுகர்ந்த 10 பேர் கைது

யாழ்ப்பாணம் நகரில் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்டிருந்த போது 10 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கூலி தொழிலில் ஈடுபடும் அவர்கள் யாழ்ப்பாணம் நகரில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் கூடி ஊசி மூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.

நேற்று புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கைது நடவடிக்கை முன்னெடுத்தனர்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் கட்டளை பெற்று மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular