Friday, September 22, 2023
Homeஅரசியல்யாழ்ப்பாணம் மாநகரில் சுதந்திர தின விழாவுக்கு எதிராக போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு

யாழ்ப்பாணம் மாநகரில் சுதந்திர தின விழாவுக்கு எதிராக போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு

யாழ்ப்பாணம் மாநகரில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை கட்டளை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விண்ணப்பத்துக்கு இந்த தடை உத்தரவு வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கிறார். இந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில் இந்த போராட்டத்துக்கு தடை உத்தரவு கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி க.சுகாஷ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இந்த தடை உத்தரவு கோரப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் பொலிஸாரின் விண்ணப்பத்தை முகத்தோற்றளவில் ஏற்று தடை கட்டளையை வழங்கினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular