யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணியின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள்

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது தொடரில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியதை அடுத்து யாழில் இளைஞர்கள் சிலர் கேக் வெட்டி தமது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

லங்கா பிரீமியர் லீக் தொடர் கடந்த நவம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை இறுதிப் போட்டி நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் காலி கிளாடியேற்றர்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணிகள் மோதியிருந்தன.

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக, சொய்ப் மலிக் 46 ஓட்டங்களையும், திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் தனஞ்சய லக்சன் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், பதிலுக்கு 189 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய காலி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் 53 ஓட்டங்களால் காலி அணி தோல்வியடைந்தது.

அணிசார்பாக, பானுக ராஜபக்ச 40 ஓட்டங்களையும் அசம் கான் 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில், உஸ்மன் சின்வாரி மற்றும் சொய்ப் மலிக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றயிருந்தனர். 

யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியதை அடுத்து யாழ்ப்பாண இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து நேற்றிரவு கேக் வெட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

- Advertisement -
- Advertisement -

Must Read

யாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் – திடீரென தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வுப் பணியில்

யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது. இன்று வியாழக்கிழமை முற்பகல் நிலாவரைக் கிணறு...
- Advertisement -

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது....

நாட்டில் கோரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 55,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட் -19 நோயால்மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர்...

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு – நேரலையைப் பார்வையிடலாம்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. அதன் நேரலையை பார்வையிடலாம்;

Related News

மன்னார் வைத்தியசாலையில் 2 தாதியர்கள், 2 ஊழியர்களுக்கு கோரோனா தொற்று; பொலிஸார் மூவரும் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும் 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் என்று வடமாகாண...
- Advertisement -
error: Alert: Content is protected !!