Wednesday, December 6, 2023
Homeஉள்ளூர் செய்திகள்யாழ்.நகரில் மோட்டார் சைக்கிள் திருட்டு; பூநகரியைச் சேர்ந்தவர் கைது

யாழ்.நகரில் மோட்டார் சைக்கிள் திருட்டு; பூநகரியைச் சேர்ந்தவர் கைது

யாழ்ப்பாணம் மாநகரில் வீதியில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் வெவ்வேறாக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறினர்.

யாழப்பாணம் செல்வா திரையரங்கு முன்பகுதியில் கடந்த 29ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை திருடப்பட்டுவிட்டது என்று யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி கேவா வசந் தலமையிலான குழுவினர் கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular