யாழ்ப்பாணம் பண்ணையில் – தீவக வீதியில் அமைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து நாளை இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகத் தீர்மானித்துள்ளனர்.
இந்தத் தகவலை யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார்.
இன்று மாலை நல்லை ஆதீனத்தில் இந்து அமைப்பு பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்தித்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சித்திரை புத்தாண்டு தினத்தில் யாழ்ப்பாணம் பண்ணகயில் தீவக நுழைவாயிலில் நயினாதீவு அம்மனின் ஆலயத்தை பிரதிபலிக்கும் வகையில் நாகபூசணி திருவுருவச் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று வழிபாடுகள் இடம்பெற்றது.
அதனை அடுத்து யாழ்ப்பாணம் பொலிஸாரினால் குறித்த சிலையினை அகற்ற அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் குறித்த சிலையுடன் தொடர்புடையோரை முன்னிலையாகி பொலிஸாரினால் அகற்றக் கட்டளை கோரிய விண்ணப்பம் மீது ஆட்சேபனையை முன்வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.