நயினாதீவு நாகபூசணி அம்மன் வீற்றிருக்கும் தீவகத்தின் நுழைவாயிலான யாழ்ப்பாணச் சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் திருவுருவச் சிலையை அகற்றுவது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை மறுதினம் (18.04.2023) யாழ்ப்பாண நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த அம்மன் சிலை தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று நாளை(17.04.2023) மாலை 4 மணிக்கு நல்லை ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நல்லை ஆதீன சுவாமிகள் தலைமையில் இடம்பெறும் இந்தக்கலந்துரையாடலில் அனைத்து இந்து சமய அமைப்புகள், ஆலய அறங்காவலர்கள் மற்றும் சைவ அபிமானிகள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.