யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

0

கம்பஹா திவுலபிட்டியவில் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் நாடுமுழுவதும் சுகாதார கட்டுப்பாடுகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த பொலிஸாருக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகரில் பொலிஸார் வீதி சுற்றுக்காவல் நடவடிக்கைகளை இன்று மாலை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகள் ஏற்றப்படுகின்றரா என்று பரிசோதனை செய்யும் பொலிஸார், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்துகின்றனர்.

மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றுமாறும் பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.