Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்யாழ்.மாநகர் கந்தர்மடத்தில் மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழ்.மாநகர் கந்தர்மடத்தில் மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் இருவர் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்றிரவு 10.30 மணியளவில் (ஜூன் 19) மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் நபர் எவருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் இருவர் மருத்துவர் என்று குறிப்பிட்ட பொலிஸார், காணி பிணக்கு ஒன்றை வைத்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருவதாகவும் கூறினர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular