லஞ்சீற்றுகளைத் தடை செய்ய சுற்றுச்சூழல் அமைச்சர் அறிவுறுத்தல்

நாட்டின் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அனைத்து வகையான லஞ்சீற்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சர் மகிந்த அமரவீர, சுற்றுச்சூழல் அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சில் நேற்று (21) நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

“2016ஆம் ஆண்டில் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன லஞ்சீற் தாள்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் சில நிறுவனங்கள் விரைவில் மக்கும் லஞ்சீற்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தன. ஆனால் அந்த முடிவு முறையாக செயல்படுத்தப்படவில்லை.

தற்போது உலகில் எந்த நாடும் லஞ்சீற்களைப் பயன்படுத்துவதில்லை. அதனைப் பயன்படுத்தும் ஒரே நாடு இலங்கைதான்.

கிடைக்கக்கூடிய தகவல்களின்படி, நான்கு பெரிய நிறுவனங்கள் மாதத்திற்கு 07-08 தொன் லஞ்சீற்றுகளை உற்பத்தி செய்கின்றன.

அதன்படி, நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 106 தொன் லஞ்சீற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.

அதன்படி, ஒரு நாளைக்கு நம் நாட்டின் சூழலில் வெளியேற்றப்படும் லஞ்சீற்றுக்களின் அளவு குறைந்தது 10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த லஞ்சீற் மண்ணில் சிதைந்து இரண்டு மூன்று ஆண்டுகளில் மறைந்துவிடும்.

இருப்பினும், லஞ்சீற் காரணமாக மண்ணில் சேரும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய நிறுவனங்கள் லஞ்சீற்றுக்கு மாற்றுகளை அறிமுகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், சில நிறுவனங்கள் லஞ்சீற் உற்பத்தி இயந்திரங்களை வீட்டுத் தொழிலாக ஊக்குவித்து வருவதால், இந்த நாட்டில் தயாரிக்கப்படும் லஞ்சீற் குறித்த துல்லியமான தகவல்களைப் பெறுவது கடினம்.

கடந்த காலங்களில் சுற்றுச்சூழல் அமைச்சு லஞ்சீற்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதால், புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிடாமல் உத்தரவு பிறப்பிக்க முடியும்” என்றும் அமைச்சர் கூறினார்.

இந்தக் கலந்துரையாடலில் சுற்றுச்சூழல் அமைச்சின் சிறப்பு செயலாளர் டாக்டர் அனில் ஜசிங்க மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!