Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்லிட்ரோ சமையல் எரிவாயு விலை 452 ரூபாவால் குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை 452 ரூபாவால் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் நாளை முதல் கொழும்பில் 3 ஆயிரத்து 186 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1 ஆயிரத்து 281 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டு 598 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட விலை சூத்திரத்தின் அடிப்படையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை வீழ்ச்சி மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகள் விலை குறைப்புக்கு காரணம் என்று பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular