Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று பெப்ரவரி 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் 334 ரூபாயினால் அதிகரித்துள்ளது. அதன்படி கொழும்பில் அதிகூடிய சில்லறை விலையாக 4 ஆயிரந்து 743 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 134 ரூபாயினால் அதிகரித்து ஆயிரத்து 904 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular