வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து

0

“குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு அரச துறை வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க அமைச்சர்கள் கவனம் செலுத்தவேண்டும். அதன்போதும் அவர்களின் திறன் குறித்து கவனம் செலுத்தத் தேவையில்லை” என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்தினார்.

அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களுக்கு தலைவர்களை நியமிப்பதனை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (நவ.22) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற அமைச்சரவை நியமனத்தின் பின் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

இராஜாங்க அமைச்சர்கள் வரும் திங்கட்கிழமை நியமிக்கப்படுவார். அமைச்சர்கள் தமது கடமைகளை திறம்பட நடத்தவேண்டும்.

பொதுமக்கள் எங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர்.

அரசியலை விரும்பாத மக்களின் மனங்களை மாற்றும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவேண்டும்.

கடந்த அரசின் கீழ் சில அரச அமைப்புகள் இழப்புகளை எதிர்கொண்டன. அதன் விளைவாக திறைசேரிக்கு சுமை ஏற்பட்டது – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here