வடக்கில் இன்று 8 பேருக்கு கோரோனா தோற்று

வடக்கு மாகாணத்தில் இன்று 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னாரில் கடந்த சில நாள்களில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புடைய 4 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், மன்னார் பொது வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தருக்கு நேற்றைய அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவைச் சேர்ந்த 2 பெண்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பணியாற்றும் கடையைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கடந்த சில நாள்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டது.

அதனால் குறித்த பெண்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மாதிரிகள் பெறப்பட்டு இன்று பரிசோதனைக்கு உள்படுத்திய போது கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 60 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

- Advertisement -
- Advertisement -

Must Read

யாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் – திடீரென தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வுப் பணியில்

யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது. இன்று வியாழக்கிழமை முற்பகல் நிலாவரைக் கிணறு...
- Advertisement -

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது....

நாட்டில் கோரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 55,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட் -19 நோயால்மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர்...

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு – நேரலையைப் பார்வையிடலாம்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. அதன் நேரலையை பார்வையிடலாம்;

Related News

மன்னார் வைத்தியசாலையில் 2 தாதியர்கள், 2 ஊழியர்களுக்கு கோரோனா தொற்று; பொலிஸார் மூவரும் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும் 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் என்று வடமாகாண...
- Advertisement -
error: Alert: Content is protected !!