வடக்கில் சட்டம், ஒழுங்கு தொடர்பில் ஆராய பொலிஸ் மா அதிபர் நேரில் வருகை

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நேரில் ஆராய்வதற்கு பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன கிளிநொச்சிக்கு வருகை தருகின்றார்.

இந்தக் கூட்டம் நாளை கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

- Advertisement -

இந்தக் கலந்துரையாடலுக்காக பொலிஸ் மா அதிபர் இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றார். அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று நண்பகல் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

பின்னர் காங்கேசன்துறையில் தங்கியிருக்கும் அவர் நாளை கிளிநொச்சிக்குப் பயணமாவார் என்று தெரிவிக்கப்பட்டது.

நாளைய கூட்டத்துக்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், மூத்த பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு நிலமைகள், பொலிஸ் துறையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன நாளை ஆராயவுள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!