வடக்கு – கிழக்கு, வடமத்திய மாகாண மக்களுக்கு புயல் குறித்து எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள பொதுமக்கள் எதிர்வரும் நாள்களில் சூறாவளிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் அது காற்றழுத்த மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த 2 தினங்களில் வலுப்பெற்று வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களில் கனமழை மற்றும் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்த பகுதி இன்று உருவாகியுள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்காள விரிகுடாவின் அருகிலுள்ள மத்திய பகுதிகளில் ஒரு குறைந்த அழுத்தப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.

அடுத்தடுத்த 48 மணி நேரத்தில் இது தீவிரமடைய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை மற்றும் தென் தமிழகம் கடற்கரையை நோக்கி நகர்ந்து நவம்பர் 25ஆம் திகதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நோக்கி வர வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இதேவேளை, வடக்கு கடற்பரப்பில் இன்று முதல் நவம்பர் 25 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- Advertisement -
- Advertisement -

Must Read

கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் 3 நாளைக்கு விடுமுறை

கிழக்கு மாகாண பாடாசாலைகள் அனைத்தும் நாளை (டிசெ.2) புதன்கிழமை தொடக்கம் வரும் வெள்ளிக்கிழமை (டிசெ.4) வரை மூடப்படுவதாக மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்.
- Advertisement -

கஞ்சாவை விற்பனை செய்ய முயற்சித்த இருவர் செம்மணியில் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் வியாபார நோக்கத்துடன் சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது...

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம்...

ஓஎல் பரீட்சை திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது – கல்வி அமைச்சர் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு...

Related News

வடமராட்சியில் காணாமற்போயிருந்த இளைஞன் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியிலிருந்து மீட்பு

வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
error: Alert: Content is protected !!