வடக்கு பொலிஸ் அதிகாரி மீது தொடர்கிறது முறைப்பாடுகள் – பொலிஸ் தலைமையக உத்தரவில் விசாரணை

 

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிலுள்ள ரெஸ்ரோறன்ட் மீது போயா தினத்தில் மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் வழக்குத் தொடர முற்பட்ட கிளிநொச்சி போதைத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

வடக்கு மாகாண பொலிஸ் அதிகாரியின் இந்தச் செயற்பாடு தொடர்பில் பொலிஸ் உயர் மட்டத்துக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் இயங்கும் ரெஸ்ரோறன்ட் ஒன்றில் போயா தினத்தில் அரச சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை கிளிநொச்சி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் பணம் செலுத்தி கொள்வனவு செய்ததுடன், அதனை விற்பனை செய்த ரெஸ்ரோறன்ட் ஊழியரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கிளிநொச்சி போதைத் தடுப்புப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களே இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர். எனினும் உடனடியாகத் தலையீடு செய்த வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரி, ரெஸ்ரோறன்ட் ஊழியரை விடுவித்தார்.

அத்துடன், இந்த நடவடிக்கையை முன்னெடுத்த உப பொலிஸ் பரிசோதகரை நெடுந்தீவுக்கும் ஏனைய உத்தியோகத்தர்களை ஊர்காவற்றுறை, பருத்தித்துறை மற்றும் வவுனியா ஆகிய இடங்களுக்கு வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரி, இடமாற்றம் வழங்கி கட்டளையிட்டார்.

இந்த விடயம் பொலிஸ் உயர் மட்டம் வரை சென்ற நிலையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் யாழ்ப்பாணம் – கொழும்பு அதிசொகுசு பேருந்து சேவையில் ஈடுபடும் நிறுவனம் ஒன்று வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடுவதாக ஒன்றுக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அந்த பொலிஸ் உயர் அதிகாரி தடையாக உள்ளார் என்று பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்தப் பொலிஸ் அதிகாரி தொடர்பில் ஊடகங்களில் அண்மையில் வெளியிடப்பட்ட செய்திகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் தொடர்பான விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம், தனது சிறப்புப் பிரிவுக்கு பணித்துள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!