Saturday, September 23, 2023
Homeஉள்ளூர் செய்திகள்வடமராட்சி விபத்தில் 14 வயது சிறுவன் பரிதாபச் சாவு

வடமராட்சி விபத்தில் 14 வயது சிறுவன் பரிதாபச் சாவு

வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சையிக்கிளும் நேருக்கு நேர் மோதி  விபத்துக்குள்ளாகியதில் 14 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று (ஓகஸ்ட் 24) மதியம் கரணவாய் வடமேற்கு கொற்றாவத்தை கணபதி மில்லுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்து.

சம்பவத்தில் கொற்றாவத்தையைச் சேர்ந்த சாகித்தியன் (வயது 14) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  அஜந்தன் (வயது 21) என்பவர் கை மற்றும் கால் முறிநது படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மோட்டார் சையிக்கிளும் டிப்பர் வாகனமும் வளைவு பகுதியில் திரும்பிய போது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சையிக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டதோடு, மோட்டார் சையிக்கிளும் டிப்பர் பவருக்குள் சிக்குண்டு தீ பற்றியுள்ளது.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular