வட்டுக்கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கண்காணிப்பதில்லை- மக்கள் விசனம்

வட்டுக்கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களை கண்காணிக்காமல் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பொறுப்பற்ற வகையில் செயற்படுகின்றார் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வட்டுக்கோட்டையில் அண்மைக்காலமாக அடையாளம் காணப்படும் கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களின் வீடுகளுக்கு தனிமைப்படுத்தல் விதியின் கீழ் அறிவித்தல் ஒட்டப்படுகின்ற போதும் அந்தக் குடும்பங்களின் நடமாட்டத்தை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கட்டுப்படுத்துவதில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுக்காவிடின் கோவிட்-19 தடுப்பு செயலணியிடம் முறையிடுவோம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

அண்மையில் வட்டுக்கோட்டை சங்கரத்தை பிட்டியம்பதி பத்திரகாளி அம்பாள் ஆலய ஆனி மாத வருடாந்த திருவிழாவுக்கு சம்பந்தப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர் அனுமதி மறுத்திருந்ததுடன் நீதிமன்ற நடவடிக்கையை நாடவேண்டி ஏற்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.