வரணி விபத்தில் குடும்பத்தலைவர் உயிரிழப்பு

வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தென்மராட்சி வரணியில் இன்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் அ.அஜந்தன் (வயது-30) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.