இலங்கை அரசு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக மாற்றி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நாளை (மார்ச் 27) திங்கட்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாயிகளிடம் இருந்து 61 ஆயிரத்து 300 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய அரசு ஏற்பாடு செய்தது. அதற்காக முதல் கட்டத்திற்கு 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீ
நெல் சந்தைப்படுத்தல் சபையை விட மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் நெல் கொள்வனவுகளை மேற்கொள்வார்கள்.
2.9 மில்லியன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த அரிசி இலவசமாக விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.
இரண்டு மில்லியன் குடும்பங்களுக்கு இரண்டு மாத மானியமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது, ஆனால் 2.9 மில்லியன் குடும்பங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.