“வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படுமென நம்பவில்லை”

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் நாடு மீண்டும் திறக்கப்படும் என்று கோவிட்-19 நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர், ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் இந்த நான்கு வார காலம் கோவிட்-19 தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க பெரும் உதவியாக இருந்தது என்று சுட்டிக்காட்டினார்.

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை விதிக்க கோவிட் -19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துதற்கான ஜனாதிபதி செயலணியின் முடிவு தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இந்த நடவடிக்கை தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவியது.
நடமாடும் சேவைமூலம் தடுப்பூசி போடப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்களுடன் தங்கள் வீடுகளுக்குள் கோவிட்-19 தடுப்பூசி இயக்கமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட பொதுமக்களின் ஆதரவையும் பாராட்டுகின்றேன்.

எனவே, தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் திங்கட்கிழமைக்குப் பின்னரும் நீடிக்கப்படும் என்று நம்பவில்லை.

கோவிட் -19 நோய்த்தொற்றின் புதிய திரிபு பரவலுடன் நாட்டை மீண்டும் திறப்பதில் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் விதிக்கப்படும் – என்றார்.