Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்வவுனியாவில் கஞ்சா போதைப்பொருள் எரியூட்டி அழிப்பு

வவுனியாவில் கஞ்சா போதைப்பொருள் எரியூட்டி அழிப்பு

வவுனியா மேல் நீதிமன்றில் முடிவடைந்த வழக்குகளின் சான்றுப்பொருளான கஞ்சா எரியூட்டி அழிக்கப்பட்டன.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று வவுனியா தாண்டிக்குளத்திலுள்ள வெற்றுக்காணியில் இவ்வாறு கஞ்சா எரியூட்டி அழிக்கப்பட்டன.

2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் முடிவடைந்த வழக்குகளின் சான்றுப்பொருளாகக் காணப்பட்ட 100 கிலோ கிராமுக்கு அதிகமான கஞ்சா போதைப்பொருளே எரியூட்டி அழித்தொழிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

வவுனியா மேல் நீதிமன்ற பதிவாளர் மீரா வடிவேற்கரசனின் ஏற்பாட்டில் நீதிமன்ற உத்தியோகத்தர்களினால் இந்த சான்றுப்பொருள்கள் எரியூட்டி அழிப்பு இடம்பெற்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular