வவுனியா நகர கொத்தணி; மேலும் 12 பேருக்கு கோரோனா தொற்று

வவுனியா நகர கோரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 12 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன்மூலம் வவுனியா நகர கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 138ஆக உயர்வடைந்துள்ளது.

வவுனியா மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி மற்றும் மில் வீதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் கடமை புரிபவர்களுள் 54 பேருக்கு கடந்த 8ஆம் திகதி கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிகள் முடக்கப்பட்டு தொற்றாளர்களுடன் தொடர்புடையோர் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில் முல்லேரியா மற்றும் அநுராதபுரம் ஆய்வுகூடங்களில் இன்று 666 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

அவர்களில் 12 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது....
- Advertisement -

நாட்டில் கோரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 55,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட் -19 நோயால்மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர்...

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு – நேரலையைப் பார்வையிடலாம்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. அதன் நேரலையை பார்வையிடலாம்;

மன்னார் வைத்தியசாலையில் 2 தாதியர்கள், 2 ஊழியர்களுக்கு கோரோனா தொற்று; பொலிஸார் மூவரும் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும் 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் என்று வடமாகாண...

Related News

மன்னாரில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் ஜனாஸா நாளை வவுனியாவில் தகனம்

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் சடலத்தை அரச செலவில் வவுனியா நகர சபையால் பராமரிக்கப்படும் மின் தகன...
- Advertisement -
error: Alert: Content is protected !!