விக்னேஸ்வரன் எம்பியிடம் வாக்குமூலம் பதிவு செய்கிறது சிஐடி

0

வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்கினேஸ்வரனிடம் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் (சிஐடி) வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்கின்றனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சிறப்பு பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளே அவரிடம் இந்த வாக்குமூலத்தைப் பெறுகின்றனர்.

யாழ்ப்பாணம் – கோவில் வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் இலத்துக்கு இன்று 4 மணியளவில் சென்ற குற்றவியல் விசாரணைப் பிரிவினர், அவரிடம் வாக்குமூலம் பெறுகின்றனர்.

கடந்த 3 மாதங்களுக்குள் அவரிடம் இரண்டாவது தடவையாக வாக்குமூலம் பெறப்படுகிறது.