விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த தங்கத்தைத் தேடிச் சென்ற 2 அமைச்சுகளின் பிரத்தியேக செயலாளர்கள் – விசாரணைகள் ஆரம்பம்

போர் காலத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை இரகசியமாக மீட்க முயற்சித்த அமைச்சர்கள் இருவரின் பிரத்தியேக செயலாளர்கள் இருவரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி காலை பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் செயலாளர் என அறியப்படுபவர் மற்றும் கடற்றொழில் அமைச்சரின் செயலாளர் என அறியப்படுபவர் புதுக்குடியிருப்புக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவாகியுள்ள சம்பவங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளிடம் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.