வீதியில் விபத்து ஏற்படக் காரணமானவர் தெனாவெட்டு – சைக்கிளில் சிக்னல் லைட் போட்டுத் திரும்பினாராம்

வட்டுக்கோட்டை – தெல்லிப்பளை வீதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் நிகழ  காரணமான துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர், தான் ‘சிக்னல் லைட்’ போட்டே  திருப்பியதாகவும் தன்னால் தவறு ஏற்படவல்லை எனவும் வாதிட்டார்.

- Advertisement -

இந்தச் சம்பவம் இன்று மாலை சித்தங்கேணி பகுதியில் இடம்பெற்றது.

சித்தங்கேணியில் இருந்து வட்டுக்கோட்டை நோக்கி இளம் பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். இதன்போது அவருக்கு முன்னால் வீதியில் துவிச்சக்கரவண்டி ஒன்றில் நடுத்தர வயதுடைய ஒருவர் மது போதையில் தள்ளாடியபடி சென்றுள்ளார்.

இதனால் அவர் பின்னே வந்துகொண்டிருந்த இளம் பெண் அந்த நபர் எங்கே திருப்ப போகிறார் என்பதை அறியாது குளம்பியவாறு தனது மோட்டார் சைக்கிளின் ஒலியை எழுப்பியவாறு சென்றுள்ளார்.

இருந்த போதிலும் துவிச்சக்கரவண்டியில் சென்றவர் தீடிரென வலது பக்க வீதியை நோக்கி தனது துவிச்சக்கர வண்டியை திருப்பவே பின்னால் வந்த இளம் பெண் அவருடன் விபத்து ஏற்படுவதை தவிர்க்க முற்பட்ட போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி  விபத்துக்குள்ளானார்.

இதனால் இளம் பெண் காலில் சிறு காயங்களுக்கு உள்ளானதுடன் அவரது மோட்டார் சைக்கிளின் பெரும் பகுதி சேதமடைந்திருந்தது.

சம்பவத்தையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள்  துவிச்சக்கர வண்டியில் வந்தவர் திடீரென பின்னால் திரும்பி பார்க்காது திருப்பியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறினார்கள்.

“நான் துவிச்சக்கரவண்டியின் சிக்னல் லைட் போட்டே திருப்பினேன். என்னில் எந்த தவறு இல்லை. பணம் வேண்டுமானால் கேளுங்கள் தருகின்றேன். அதற்காக தேவையில்லாமல் என் மேல் பழி போட வேண்டாம்” என்று துவிச்சக்கர வண்டியில் வந்தவர்  தெரிவித்தார்.

துவிச்சக்கர வண்டிக்கு சிக்னல் லைட் போட்டே  தான் திருப்பியதாக அந் நபர் கூறியதை கேட்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்து போயினர்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!