Friday, September 22, 2023
Homeஅரசியல்வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இணையவழியில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இணையவழியில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டிற்கு அல்லது தமது கடவுச்சீட்டை புதுப்பித்துக் கொள்ள இணையவழியில் அணுக முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்குச் செல்லத் தேவையில்லை. கடவுச்சீட்டுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, இணையவழி கடவுச்சீட்டை (e-passport)
அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தனித்தனியாக, இணையவழி நுழைவிசைவு (விசா) விண்ணப்ப நடைமுறையில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

வெளிநாட்டவர்கள் நுழைவிசைவை (விசா) இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான பொறிமுறையை உடனடியாகத் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும், இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டினருக்கான வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular