வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறும்

வெள்ளிக்கிழமை அரச அலுவலகங்களுக்கு விடுமுறை நாளாக இருந்தாலும் நீதிமன்ற நடவடிக்கைகள் வழமை போன்று தொடர வேண்டும் என்று நீதிச்சேவை ஆணைக்குழு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது அனைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் உயர் நீதிமன்றத்தின் பதிவாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றாலும் மிகவும் அத்தியாவசியமான ஊழியர்களே கடமைக்கு அழைக்கப்பட வேண்டுமெனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.