உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு இந்த மாத அடிப்படை சம்பளத்தை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர இன்று (4) நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
தமிழ், சிங்கள புத்தாண்டை
இந்த மாதச் சம்பளம் (மார்ச் 9 ஆம் திகதி முதல் ஏப்ரல் 25 ஆம் திகதி வரை) எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களில் சிலர் கடமைக்குச் செல்வதாகத் தமக்குச் செய்தி கிடைத்துள்ளதாகவும் இது சட்டத்துக்குப் புறம்பான வேலை என்பதால் அவர்கள் வேலையிழக்கக் கூடும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே வக்கம்புர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“அடிப்படை சம்பளம் வழங்க தேர்தல் ஆணைக்குழு பரிந்துரை செய்தது. அதனால்தான் இந்த அமைச்சரவை பத்திரம் போடப்பட்டது” என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.