வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும்: பாடகி சின்மயி

வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனைதான் செய்ய வேண்டும் என்று பாடகி சின்மயி கூறியுள்ளார்.

- Advertisement -

மீ டூ (நான் கூட) எனும் ஹஷ்டேக் கடந்த திங்கள்கிழமை முதல் இந்திய சினிமாவை உலுக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்கப் பொய்யானவை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்கப் பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் கொண்டவை என்று குறிப்பிடடுள்ளார்.
இந்தநிலையில் வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனைதான் செய்ய வேண்டும் என்று பாடகி சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் இவ்வாறு கூறியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!