ஹற்றன் நஷனல் வங்கியின் கைதடிக் கிளையில் நுண் நிதிப் பிரிவு ஆரம்பம் – பிரதேச விவசாயிகள் உள்ளிட்ட தொழில் முயற்சியாளர்கள் கால விரயமின்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு

ஹற்றன் நஷனல் வங்கியின் கைதடிக் கிளையில் நுண் நிதிப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பிரதேசத்தின் விவசாயிகள், சுயதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்டோர் தமக்கான நுண் நிதி (Micro Finance) தேவைகளை வங்கிக் கிளையின் ஊடாக நிறைவு செய்துகொள்ள முடியும் என்று வங்கியின் வடபிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

ஹற்றன் நஷனல் வங்கியின் கைதடிக் கிளை ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டை முன்னிட்டு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கிளையில் நுண் நிதிப் பிரிவு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்கான தனியான அலுவலகரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

ஹற்றன் நஷனல் வங்கியின் வடபிராந்திய வியாபார மூத்த முகாமையாளர் வாதுளன் கணேஷன், வடபிராந்திய கடன் அதிகாரி, மூத்த முகாமையாளர் மகேசன் தயாகரன், வடபிராந்திய நுண்நிதியியல் முகாமையாளர் செல்வராசா செந்தூரன், கிளையின் முகாமையாளர் திருமதி மீரா சதீஸன், உத்தியோகத்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

ஹற்றன் நஷனல் வங்கியின் கைதடிக் கிளையில் இதுவரை நுண் நிதியியல் நடவடிக்கைகள் இடம்பெற்று வராத நிலையில் கிளை ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நுண் நிதிப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் பிரிவின் ஊடாக நுண் நிதி தேவைகள் மற்றும் வாகனக் குத்தகை கொள்வனவு வசதி ஆகியவற்றை பிரதேச மக்கள் கால விரயமின்றி பெற்றுக்கொள்ள முடியும்.
கைதடிப் பிரதேசத்தின் விவசாயிகள், வியாபாரிகள், குடிசைக் கைத்தொழில் உள்ளிட்ட கைத்தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு இந்தப் பிரிவின் ஊடாக தமது நுண் நிதித் தேவைகளை நிறைவு செய்ய முடியும் என்று வங்கியின் வடபிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

நுண் நிதிப் பிரிவின் ஆரம்ப நிகழ்வில் வைத்து கைதடிக் கிளையின் வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதிகள், கடன் அட்டை வசதி, வங்கி கணக்கில் இருந்து பணத்தை உடனடியாக செலுத்துவதற்கான வசதி (Quick Response), நுண் நிதியியல் காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பிராந்திய மூத்த முகாமையாளர்களினால் வழங்கிவைக்கப்பட்டன.

இதேவேளை, வடபிராந்தியத்தில் உள்ள 18 கிளைகளின் ஊடாக நுண் நிதி சேவைகளை ஹற்றன் நஷனல் வங்கி வழங்குகின்றது என்று வங்கியின் வடபிராந்திய அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!