Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் கைது; நீண்ட நாள்களின் பின் சிக்கினார்

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் கைது; நீண்ட நாள்களின் பின் சிக்கினார்

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளி 5ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த 32 வயது பெண்ணே கைது செய்யப்பட்டார்.

உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular