10 கட்சிகள் அமைச்சர் பதவிகளை ஏற்காமல் ரணிலுக்கு ஆதரவளிக்கும்

நாடாளுமன்றத்தில் உள்ள 10 சுயேச்சைக் கட்சிகளின் பிரதிநிதிகள் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்காமல் புதிய அரசுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

விரைவில் புதிய வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவிகளை ஏற்காத அரசியல் கட்சிகள், நாடாளுமன்றத் துறைசார் கண்காணிப்புக் குழுக்களில் பங்கேற்கும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக, உதய கம்மன்பில தெரிவித்தார்.