11 இளைஞர்கள் கடத்திக் கொலை – வசந்த கரன்னகொட மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படாது

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடரப்படாது என சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.

கொழும்பில் 2008 மற்றும் 2009 காலப்பகுதியில் 11 பேர் கடத்தப்பட்டு, கப்பம் பெறப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆள்களைக் கடத்தியது, சித்திரவதை செய்தது, கப்பம் பெற்றது, கொலை செய்ய சூழ்ச்சி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக சட்ட மா அதிபரால் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ், 667 குற்றச்சாட்டுகள் தயாரிக்கப்பட்டது. இந்தக் குற்றப்பத்திரம் மீதான விசாரணை கொழும்பு நீதாத விளக்கம் முன் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, மற்றும் கடற்படை அதிகாரிகளான டிகேபி தசநாயக்க, சம்பத் முனசிங்க, சுமித் ரணசிங்க, டிலங்க சேனாரத்ன, நளின் பிரசன்ன விக்ரமசூரிய, அன்ரன் பெர்னான்டோ, ராஜபக்ச பத்திரனஹேலகே கித்சிறி, அனுர துசார மென்டிஸ், கத்திரிஆராச்சிகே காமினி எனப்படும் அம்பாறை காமினி, சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி எனப்படும் நேவி சம்பத், உபுல் சந்திம எனப்படும் அண்ணாச்சி, நந்தபிரிய ஹெற்றிஹெந்தி, சம்பத் ஜனககுமார எனப்படும் பொடி குமார ஆகியோருக்கு எதிராகவே குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குற்றவியல் சட்டத்தின், 102, 113 A, 356, 338, 333, 198, 372, 32 மற்றும் 296 பிரிவுகளின் கீழ் அவர்களின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த நிலையிலேயே முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடரப்படாது என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.

4 இளைஞர்களின் உறவினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தது.

நீதியரசர்கள் சோபித ராஜகருணா, தம்மிகா கனேபொல அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வில் இந்த அறிவித்தலை சட்ட மா அதிபர் வழங்கினார்.

கடந்த ஓகஸ்ட் 4ஆம் ஆம் திகதி, வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொழும்பு நீதாய விளக்கத்துக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!