18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் உள்நாட்டு வருமானவரி திணைக்களத்தில் வரிக் கோப்பினை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரிக் கோப்பினைத் திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், அனைவரும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.
இதை அடுத்த வருடம் யார் தவிர்க்க முடியும் எனவும் விளக்கமளித்தார்.
எதிர்காலத்தில் இந்த வரிக் கோப்பு இலக்கத்தின் அடிப்படையில் நலன்புரி கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும் என்று சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பட்டயக் கணக்காளர்கள், கட்டடக் கலைஞர்கள் உள்ளிட்ட 14 வகைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் நேற்று (01) முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் சிறப்பு அரசிதழ் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் அனுமதியுடன் நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசிதழ் அறிவிப்பின்படி, மாதாந்திர பங்களிப்பு பங்களிப்பு 20,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்த ஊழியர்கள் உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.