இளம் பெண்ணை வீட்டைவிட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு திரும்பிய 55 வயதுடைய ஒருவர் பெண்ணின் ஊரவர்களினால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஆறு பேர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் உடுவில் அம்பலவாணர் வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் உடுவில் – சங்குவேலியைச் சேர்ந்த 55 வயது மரியதாஸ் ஜெகதாஸ் என்பவரே உயிரிழந்தார்.
குறித்த நபர் கடந்த நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இளம் பெண்ணுடன் வீட்டைவிட்டுச் சென்று தலைமறைவாகி இருந்துள்ளனர்.

பெண்ணின் உறவினர்கள் அவர் காணாமற்போய்விட்டார் என அன்றைய தினமே சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
பெண்ணின் உறவினர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அதனால் இளம் பெண்ணுடன் அவரது வீட்டு அந்த நபர் சென்றுள்ளார். அதன் போது ஊரவர்கள் திரண்டு தாக்கியுள்ளனர்.
தாக்குதலினால் மூச்சடங்கிய நிலையில் காணப்பட்ட அவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற பகுதியைச் சேர்ந்த நால்வரை இன்று பிற்பகல் கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.