யாழ்ப்பாணம் அனலைதீவில் இன்று (ஜனவரி 24) இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது 60 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.
வடக்கு கடற்படைத் தளபதியின் கட்டளையுடன் ஊர்காவற்றுறை பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த கஞ்சா போதைப்பொருள் இரண்டு சாக்குகளில் 25 பொதிகளில் இருந்தன. சுமார் 60 கிலோ 652 கிராம் (ஈரமான எடை) எடை கொண்டது.
கடலில் தொடர்ந்து கடற்படை நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக கஞ்சாவை கரைக்குக் கொண்டுவரத் தவறியதால் கடத்தல்காரர்கள் பொதிகளை கடலில் கைவிட்டுச் சென்றதாக நம்பப்படுகிறது.
கேரள கஞ்சாவின் சந்தை மதிப்பு 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.