சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட குறைந்த வருமானம் பெறும் 20 லட்சம் குடும்பங்களுக்கு அவர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2 மாதங்களுக்கு மாதாந்தம் தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
61 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் நெல்லை மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் உதவியுடன் கொள்வனவு செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.