ஈபிடிபி வேட்பாளர் மீது கூட்டமைப்பினர் தாக்குதல் என முறையீடு!

0

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்றுறை தம்பாட்டி வேட்பாளர் மீது தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டனர் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றது.

தாக்குதலில் படுகாயமடைந்த வேட்பாளர் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

“ஊர்காவற்றுறை தம்பாட்டி பகுதியில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளரின் வீட்டுக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தும் வருகின்றனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here