தாதியை கூட்டுப் பலாத்காரம் செய்து காணொலி எடுத்த விவகாரம்: கப்டன், மருத்துவர் உள்ளிட்ட 4 இராணுவத்தினர் கைது

0

கொழும்பின் முன்னணி தனியார் வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் தாதியை கூட்டு பலாத்காரம் செய்து காணொலி எடுத்த குற்றச்சாட்டில் இராணுவத்தின் கப்டன், இராணுவ மருத்துவர் உள்ளிட்ட 4 இராணுவத்தினர் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர். 

இரானுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் செயற்படும் இராணுவ பொலிஸ் பிரிவின் கப்டன் ஜே.எம்.ஏ.கே. ஜயவர்தன, இராணுவ மருத்துவர் உள்ளிட்ட 4 இராணுவத்தினரே கைது செய்யப்பட்டனர் . 

“இராணுவ தலைமையகம் ஊடாக விடுக்கப்பட்ட  அழைப்புக்கு இணங்க இராணுவக் கப்டன் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு முற்பட்ட போது, அவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து கஞ்சாப் போதைப் பொருளை உரிஞ்சுவதற்கு பயன்படுத்தப்படும் ஒருவகை உபகரணம் உள்ளிட்டவற்றை கைப்பற்றப்பட்டன” என்று பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர் கல்லடி, மன்னார் இராணுவ முகாமுக்குட்பட்டு சேவையில் இருப்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்த விவகாரம் தொடர்பில் இராணுவ கப்டன் தர மருத்துவர் ஒருவர்,  லான்ஸ் கோப்ரல் தர சாரதி, தகவல் தொழில் நுட்ப பொறியியலாளர் என மூவரை  நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் அவர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், தாதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து மது, கஞ்சா சுருட்டு போன்றவற்றை உபயோகிக்கச் செய்து அவரை இவ்வாறு பாலியல் பலாத்காரத்துக்கு பல சந்தர்ப்பங்களில்  உட்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும்  மூவரைத் தேடி தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.